உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு முழுமையான ஆதரவு! சிறிநாத் உறுதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி ஆகியோர் உறுதியான நிலைப்பாடுகளை கூறி இருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அவர்களுடைய இந்த விடயத்திற்கு நாங்கள் முழுமையாக ஆதரவினையும் முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அழிவுகளும் பிரச்சினைகளும்
2019 ஆம் ஆண்டு குண்டு தாக்குதலின் மூலம் இந்த நாட்டில் பல அழிவுகளும் பிரச்சினைகளும் இடம்பெற்றிருந்தது.
அன்றைய காலகட்டத்தில் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முக்கிய காரணமாக இது காணப்பட்டிருந்தது. மிக படு மோசமான முறையில் தங்களுடைய அரசியலுக்காகவோ அல்லது பயங்கரவாத நிகழ்வுகளுக்காகவோ ஒரு மதத்தின் பெயரால் மற்றைய மதத்தை மத ஸ்தலங்களை பொருளாதாரத்தையும் சீர்குலைக்கின்ற வகையில் இந்த தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது.
மிக முக்கியமாக இந்த விடயத்தில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பலர் மரணித்திருந்தாலும் பலர் பின்னணியில் இருந்தவர்கள் தண்டிக்கப்படாமல் நீதி காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த விடயத்தில் எமது தமிழ் சமூகத்துக்கு பல அழிவுகள் இடம்பெற்று இருக்கின்றது. கடந்த காலங்களில் எல்லா சந்தர்ப்பங்களிலும் இவ்வாறான நீதி மறுக்கப்பட்டிருக்கிறது அலட்சியப்படுத்தப்பட்டிருக்கின்றது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 17 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
