உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! ராணுவப் புலனாய்வு அதிகாரியின் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ராணுவப் புலனாய்வு அதிகாரியொருவர் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாகத் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் அதிகாரியான கேணல் கெளும் மத்துமகே மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
பூர்வாங்க ஆட்சேபனை
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு முன்பு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்பினார்.

அதன்பிறகு, சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவும், சட்டமா அதிபரின் பூர்வாங்க ஆட்சேபனைக்கு ஆதரவாகத் தனது வாதங்களை முன்வைத்தார்.
பின்னர், இந்த பூர்வாங்க ஆட்சேபனை மீதான தனது எதிர்வாதங்களை மனுதாரர் முன்வைப்பதற்காக, இந்த வழக்கை ஜூன் 22 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் சுரேஷ் சாலேவிற்காக வெடித்துள்ள போராட்டம்! கூடாரங்களை அகற்றிய பொலிஸார் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு