ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி அன்று வீதியில் இறங்கிய பேராயர் இன்று எங்கே.. மொட்டுக் கட்சி பகிரங்க விமர்சனம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரத்தில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தற்போது மௌனம் காப்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது.
அக்கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ குட்டியாராச்சி இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் நடத்தியது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி
முப்பது வருட காலப் போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த தலைவரைக் கொண்ட எமது கட்சிக்கு, குண்டுகளை வைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் கிடையாது. தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிந்து கைது செய்வோம் என்று தேசிய மக்கள் சக்தியினர் மேடைகளில் முழக்கமிட்டனர்.
தற்போதைய அரசு அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எமது ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதியில் இறங்கிப் போராடினார். ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு அவர் மௌனமாக இருக்கின்றார்.

பேராயர் மீண்டும் வீதிக்கு வந்து, தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்குமாறு இந்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி விசாரணைகளைத் தீவிரப்படுத்தி உண்மைக் குற்றவாளிகளை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam