இலங்கையில் பகிரங்கமாக திருடப்படும் பொது நிதி! நிரூபிக்கப்பட்ட விடயம்
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு வருடங்களாகிவிட்ட போதிலும் அதற்கு பொறுப்பேற்க எவரும் இல்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொறுப்பான ஆட்சியாளர்கள் அற்ற நாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான விடயம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு யார் காரணம் என்பதை கண்டறிவதற்கு தவறியுள்ளமை பௌத்த கோட்பாடுகளிற்கு எதிரான விடயம் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வது ஆட்சியாளர்களின் கடமை என்றுதான் புத்தர் போதித்தார் என்றும் சோபித தேரர் குறிப்பிட்டார்.
உலகில் ஆட்சியாளர்கள் பகிரங்கமாக பொது நிதியை திருடும் ஒரே நாடு இலங்கை மட்டுமே. எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவம் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பொது நிதியை வெளிப்படையாக திருடுவதை நிரூபித்துள்ளது எனவும் தேரர் கூறினார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




