ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை! விரைவில் நாடாளுமன்றில் விவாதம் நடத்த அரசு தயார்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல், அரசியல் பழிவாங்கல் ஆகியவை தொடர்பில் விசராணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதத்தை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது முன்னைய ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இதுவரை வெளிவரவில்லை என்பதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்தோடு தமது ஆட்சியில் முக்கியமான இந்த இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை தமக்கு இருக்கின்றது எனவும், விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் வாக்குறுதியளித்தார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
