ஈஸ்டர் தாக்குதல் : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்தும் தகவல்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார், இதில் அவர் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முறையான விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளபடி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னமும் நடைபெற்று வருகின்றது.

அத்துடன், விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் குறைபாடுகள், அலட்சியம் குறித்தும் தற்போது முறையான விசாரணை நடைபெறுகின்றது.
உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தகவல்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
சுவிஸ் நாட்டவரின் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்கள்: பின்னணி News Lankasri