பிள்ளையானின் கொலைப்பட்டியல் ஒன்றை விரைவில் வெளியிடுவேன்: பிரபா ஆவேசம் (Video)
பிள்ளையானின் கொலைப்பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் வெளியிடுவேன் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (20.09.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதல் என்பது தமது கதிரைகளை தக்கவைப்பதற்காக அப்பாவி மக்களை இலக்குவைத்த தாக்குதல் என்பது சர்வதேசம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரியும்.
பிள்ளையான் சிறையில் இருக்கும்போது சஹ்ரானின் சகோதரனை சந்தித்தாகவும் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று தனக்கு அன்று தெரியும் என்று கூறியுள்ளார்.

திலீபனின் நினைவேந்தல் ஊர்தியால் தமிழ்- சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோன்றும்: தயாசிறி (Video)
பிள்ளையான் குற்றமற்றவர் இல்லை
அன்று அவருக்கு இது தெரிந்திருந்தால் ஏன் அவர் அதனை உரிய பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டுசெல்லவில்லை.
எனது அம்மாவின் தங்கையின் மகன் கோவிந்தராஜன் என்பரை கடத்திச்சென்று படுகொலை செய்ததிலிருந்து மாநகரசபை உறுப்பினராக நான் கடமையாற்றியபோது எனது பத்திரிகையாளராக இருந்தவரை கடத்திச்சென்று கொலைசெய்தது வரையான பல கொலைகள் அடங்கிய பட்டிலை ஆதாரத்துடன் மிக விரைவில் வெளியிடுவேன்.
இன்று பிள்ளையான் தப்புவதற்காக கொஞ்சம் மக்களை ஏற்றிவந்து உங்களது காரியாலயத்திற்குள் வைத்துக்கொண்டு நீங்கள் சொல்வதை சொல்லிக்கொண்டு மக்களை ஆர்ப்பாட்டம் செய்யவைக்கின்றீர்கள்.
பிள்ளையான் நல்லவர், குற்றமற்றவர் என்றால் வடக்கு கிழக்கில் உள்ள பொது வீதியிலிறங்கி சொல்லவேண்டும். என தெரிவித்துள்ளார்.

NEW பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 13 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
