அசாத் மௌலானா - இனியபாரதி - மேஜர் ஜெனரல் கபிலவின் இரகசிய சந்திப்பு தொடர்பில் அதிரும் விசாரணை
முன்னாள் அரச புலானாய்வுதுறையின் தலைவராக இருந்த நிலந்த ஜயவர்த்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
2019 இல் இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கதவறியதன் விளைவாக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் அண்மைகால விசாரணைகளில் கிடைக்கப்பெற்றிருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முக்கிய சாட்சியான அசாத் மௌலானா உட்பட்ட பலரை அழைத்து வருவதற்கான இராஜதந்திர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2018 செப்டெம்பர் மாதமளவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவின் வாசஸ்தலத்தில் சுரேஸ் சாலே ஒரு முக்கிய சந்திப்பினை முன்னெடுத்தாகவும் அதில் இனிய பாரதி உட்பட்ட மூவரும், அசாத் மௌலானா, மற்றும் முன்னாள் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் கபில ஆகியோர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான முக்கிய ஆதாரங்கள் இல்லாமல் இலங்கை புலனாய்வுதுறை திணறிக்கொண்டிருக்கின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
