உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறது : கர்தினால் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற தமது கோரிக்கை அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தமது போராட்டத்தை புதுப்பித்து நீதிக்காக போராடுவார்கள் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டு விழுப்புண் அடைந்த நிலையில், ஐந்து வருடங்களுக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை காலமான திலினா ஹராசினிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்துள்ளார்.
குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் ஐந்து வருடங்கள் பாரிய துன்பங்களை அனுபவித்த திலினாவுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |