கஜ்ஜா பாணியில் சலேவுக்கும் நடக்கப்போவதென்ன! தகவல் கசிவு
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அரச புலானாய்வு பணிப்பாளர் துவான் சுரேஷ் சலே வெளியில் வந்தால் மித்தெனிய கஜ்ஜாவுக்கு நடந்ததே உனக்கும் நடக்கலாம் என இடதுசாரிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சமீர போரேரா தெரிவித்துள்ளார்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு தொடர்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியதாவது,
சலேவை காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை
ரஜபக்சவர்களுக்கு சலேவை காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. மித்தெனிய கஜ்ஜாவுக்கு நடந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.கஜ்ஜா ராஜபக்சவர்கள் தொடர்பில் கதைத்து இரண்டு நாட்களில் பிள்ளைகளுடன் கொலை செய்யப்பட்டார்.
அவர்கள் அப்படி தான்.தங்களுக்காக வேலை செய்தவர்களுக்கு பிரதி உபகாரம் செய்வது. கஜ்ஜா ராஜபக்ச குடும்பத்திற்கு எவ்வளவோ செய்தவர்.

ஆனால் எவ்வித இரக்கமும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டார்.சலே மச்சான் நீ உள்ளே இருப்பது தான் உனக்கு பாதுகாப்பு.அரச இயந்திரம் மிகவும் நீதியாக இயங்குகிறது.
அங்கே இங்கே என்று விசாரணைக்கு அழைத்து செல்வார்களே தவிர உயிருக்கு ஆபத்தில்லாத இடமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 13 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri