விசாரணையை சர்வதேசத்திடம் கொண்டு செல்லுங்கள்: ஆளும் தரப்பு அமைச்சர்கள் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு சர்வதேச விசாரணையை நடத்துமாறு சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழு விசேட நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தில் இணைந்ததாகத் தெரிவித்த அமைச்சர்கள், அதில் ஆறு நிபந்தனைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இவ்வாறானதொரு நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேசத்திடம் குற்றவாளிகளை முன்னிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிர்வலைகளை ஏற்படுத்திய சனல் 4 காணொளி: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்(Video)
நெருக்கடியை உருவாக்கிய அதிகாரம்
"தேவனுடைய ஆலயத்தை இடிப்பவன் தேவனால் அழிக்கப்படுவான், ஏனென்றால் தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது, நீயே அந்த ஆலயம்."
நெருக்கடியை உருவாக்கி அதில் இருந்து அதிகாரம் பெற்ற எவராலும் அந்த அதிகாரத்தை தக்கவைக்க முடியாது என்பதை இயற்கை கூட நிரூபித்துள்ளது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
