இலங்கையில் விவாகரத்து பெறுவதை எளிதாக்கும் முறை
இலங்கையில் விவாகரத்து பெறுவதை மிகவும் எளிதாக்கும் மூன்று வரைவு யோசனைகள் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்டத்தில் திருத்தம் ஆகியவை தொடர்பிலேயே யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.
இந்த சட்டங்கள் தற்போது விவாகரத்து பெறுவதற்கான காரணங்களை கடுமையாக கட்டுப்படுத்தி வருகின்றன என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சட்டத்தில் திருத்தம்
தற்போது, விவாகரத்து கோருபவர்கள் நீதிமன்றத்தில் மூன்று காரணங்களில் ஒன்றை நிரூபிக்க வேண்டும், மூன்றாம் தரப்பினருடன் மனைவியால் தகாத முறையில் ஈடுபடுதல், தீங்கிழைக்கும் துறவு அல்லது ஆண்மையின்மை போன்ற விடயங்களே அவையாகும்.
எனினும் இந்த காரணங்களை நிரூபிப்பது மிகவும் கடினம் என்பதால் விவாகரத்து வழக்குகள் 10-20 ஆண்டுகள் வரை விசாரணை செய்யப்படுவதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
எனினும் புதிய சட்டம், கணவன் மனைவி காணாமல் போனவர்களுக்கு விவாகரத்து விடயங்களை எளிதாக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் விடயத்தில் விவாகரத்து கோரும் ஒருவர், குறிப்பிட்ட திகதியில், நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக வேண்டும் அல்லது அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யலாம்.
அவர்கள் தங்களைத் தாங்களே முன்வைக்கத் தவறினால், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றால், விவாகரத்து வழங்கப்படும் வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புச் சட்டத்தின் கீழ், வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் விவாகரத்துகள் இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அவசர மற்றும் இடைக்கால நீதிமன்ற உத்தரவுகள் எனபவற்றை, தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் உட்பட பல்வேறு வழிகளில் வழங்கப்படக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |