ஜனவரி முதல் அதிகரிப்பு! அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் மகிழ்ச்சிகர அறிவிப்பு
அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவின் அதிகரிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதில் பாதியையாவது ஜனவரி மாதம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சலுகைகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொதுமக்களுக்கு இன்னும் சலுகைகள் கொடுத்தால் நன்றாக இருக்கும், ஏற்கனவே அதிகபட்ச நிவாரணம் கொடுத்தோம். 1.3 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் என்பது மாதத்திற்கு ரூ.13 பில்லியன் புதிய அதிகரிப்பு. மறுபுறம், ஓய்வூதியம் பெறும் 730,000 பேருக்கு 2,500 ரூபா அதிகரிப்பு வழங்கப்படுகிறது.
அரசாங்க ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவின் அதிகரிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் அதில் பாதியையாவது ஜனவரி மாதம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த விவகாரங்களில் அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.
மேலும், எமது நாட்டில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 200,000 குடும்பங்கள் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுமார் 50,000 பேருக்கு இலவச உரிமையும், 200,000 பேருக்கு அஸ்வெசுமவும் வழங்கப்படும்.
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மாதம் 15,000 ரூபாய், சிறுநீரகம் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை ரூ. 2,500, முதியோர் நலத்திட்டம் ரூ. 3,000.
காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் அடுத்த ஆண்டு பலன்கள் கிடைக்கும். இதுபோன்ற நேரத்தில் அரசு தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறது என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
