டோங்கா தீவுக்கருகில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி அச்சுறுத்தல் தொடர்பில் வெளியான தகவல்
டோங்கா தீவுகளுக்கு அருகே 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ( 24) பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு மிக ஆழத்தில் ஏற்பட்டிருப்பதால், சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
சுனாமியை அச்சுறுத்தல் ஆய்வு
இந்த நிலநடுக்கம் கிட்டத்தட்ட 238 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, டோங்காவில் உள்ள நெயாஃபு நகரத்திலிருந்து 150 கி.மீ.க்கும் அதிகமான தொலைவில் இருந்ததாக USGS மேலும் கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் சுனாமியை உருவாக்கியுள்ளதா என்பதை ஆய்வு செய்து வருவதாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்! இலங்கைக்கு காத்திருக்கும் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri