ஆயிரக்கணக்கானோரை காவு வாங்கிய நிலநடுக்கம் இன்று! சுனாமி எச்சரிக்கை
பசிபிக் தீவில் அருகே அமைந்துள்ள டொங்கா நாட்டின் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள குறித்த நிலநடுக்கம் இன்று(30.03.2025) ஏற்பட்டுள்ளது.
இதுவரை 1,700 பேர் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர். காணமல் போன நூற்றுக்கணக்கானோரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோரப் பகுதிகளை பாதிக்க வாய்ப்பு
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கூற்றுப்படி, அபாயகரமான சுனாமி அலைகள் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர் வரையிலான கடலோரப் பகுதிகளை பாதிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
171 தீவுகளைக் கொண்ட டொங்காவில் 100,000இற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. பெரும்பாலான மக்கள் டொங்காடாபுவின் பிரதான தீவில் வாழ்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
