ஜப்பானில் சற்றுமுன் பதிவான நிலநடுக்கம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தெற்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி காலை 11:46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் (0246 GMT) 50 கிலோமீட்டர் ஆழத்தில் 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
நில நடுக்கத்தின் தாக்கம்
ககோஷிமா மாகாணத்தின் தெற்கு அமாமி பகுதியில் உணரப்பட்டுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
மேலும், சேதம் அல்லது காயங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ள ஜப்பான், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
அந்நாடு கடுமையான கட்டிட விதிமுறைகளையும், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளையும் கொண்டிருப்பதால், நிலநடுக்கங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
இன்று(20) ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் உடனடி இடையூறுகளை ஏற்படுத்தவில்லை, ஆனால் பின் அதிர்வுகளுக்காக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் உள்ளனர்.
வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam