ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கம் : வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) இன்று அதிகாலை 4.43 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் உயிரிழப்பு
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்வடைந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Afghanistan rocked awake by pre-dawn 5.9-magnitude tremors in Hindu Kush earthquake hotspot
— RT (@RT_com) April 16, 2025
It is the strongest tremor in the last month felt as far away as Tajikistan and Kyrgyzstan. pic.twitter.com/k5U83EUyu9
எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சத்யாவிற்கு ஊசி போடப்போன சிட்டி, முத்துவிற்கு வந்த போன், பிறகு.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் புரொமோ Cineulagam

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
