ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஈக்வடார் கடற்கரைக்கு அருகே 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய - மத்திய நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 23 கிமீ (14.29 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈக்வடார் நில அதிர்வு
மேலும், உயிரிழப்புகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான தகவல்களுத் வெளியாகவில்லை.
ஈக்வடார் நில அதிர்வு பேரழிவுகளின் நீண்ட மற்றும் வேதனையான வரலாற்றைக் கொண்டுள்ள ஒரு நாடாகும்.
2013 ஆம் ஆண்டில், வடக்கு பெரு மற்றும் தெற்கு ஈக்வடாரை உலுக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளனர்.மற்றும் வீடுகள், பள்ளிகள் மற்றும் சுகாதார மருத்துவமனைகள் பாதித்திருந்தன.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டில், 1979 க்குப் பிறகு ஈக்வடாரின் மிக சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது - குறைந்தது 77 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நாடு பசிபிக் பெருங்கடலின் "நெருப்பு வளையம்" என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது கடலை சுற்றியுள்ள நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாடுகளின் கொந்தளிப்பான மண்டல பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |