யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் வீடு உடைத்து 41 பவுண் நகைகளை கொள்ளை அடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (3) அதிகாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது கொள்ளையிட சென்ற நபர்கள் வீட்டில் இருந்த 47 பவுண் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் விரைந்து செயற்பட்ட யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கொள்ளையடித்த நபரை கைது செய்ததுடன் நகைகளையும் மீட்டுள்ளனர்.
கொள்ளை அடித்த நபர் அதே இடத்தை சேர்ந்தவர் என்றும் அவரை கைது செய்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
