வானொலி சேவை ஒன்றிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள மொட்டு கட்சி
இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வி சானக, ஒரு வானொலி அலைவரிசைக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மறைந்த உறவினர், பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக ஒரு நிகழ்ச்சியின் போது குறித்த வானொலி பொய்யாகக் கூறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை அடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு (DMR 01083/25) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவதூறு செய்தி
குறித்த கருத்துக்கள் அடிப்படையற்றவை மற்றும் அவதூறானவை என்று சானக தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்தடுத்த ஒளிபரப்புகளின் போது அறிக்கையைத் திருத்துமாறு முன்னர் கோரிக்கைகள் விடுத்த போதிலும், அந்த வானொலி அவ்வாறு செய்யத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த வழக்கு பொதுத் திருத்தம் மற்றும் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு ஆகிய இரண்டையும் கோருவதாக தெரிவித்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
