கலால் திணைக்களத்துக்கு வரி ஏய்ப்புச் செய்யும் மதுபான ஆலைகள்
இலங்கையின் நான்கு முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் கலால் திணைக்களத்துக்கு 551 கோடி ரூபா வரி பாக்கி வைத்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது.
தேசிய கணக்காய்வு ஆணையாளர் அலுவலகத்தின் கணக்காய்வின் போது இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
வருமான வரி செலுத்தவில்லை
நான்கு மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளும் 549 கோடி வரிப்பாக்கியை வைத்துள்ள நிலையில், கள்ளு உற்பத்தி நிறுவனமொன்று மேலும் ஒன்றரைக் கோடி ரூபா வரியை பாக்கியாக வைத்துள்ளது.
அத்துடன் மதுபான வடிசாலைகளில் இருந்தும் ஒரு கோடி 65 லட்சம் ரூபா அளவில் வரி செலுத்தப்பட வேண்டி உள்ளது அதற்கு மேலதிகமாக குறித்த மதுபான உற்பத்தி நிலையங்கள் நான்கும் கடந்த ஐந்து வருடங்களாக 38கோடி ரூபா வருமான வரியைச் செலுத்தாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நிறுவனங்களின் வரிப் பாக்கியை அறவிட சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய கணக்காய்வு ஆணையாளர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |