இலங்கை பள்ளிவாசலில் தொழுகை கடமையில் ஈடுபட்ட நடிகர் துல்கர் சல்மான்
தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான்(Dulquer Salmaan) இலங்கை வந்துள்ளார்.
நடிகர் துல்கர் சல்மான் எதற்காக இலங்கை வந்துள்ளார் என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் அவர் இன்று பேருவளை தர்கா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று தனது தொழுகை கடமைகளை நிறைவேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் அதிர்ச்சி
துல்கர் சல்மானின் தந்தை, நடிகர் மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அண்மையில் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் திரையுலகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து, நடிகர் மோகன்லால் இருமுடி சுமந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று மம்மூட்டி நலம்பெற வேண்டிக்கொண்டார்.
எனினும், தனது தந்தை நலமாக இருப்பதாக பின்னர் துல்கர் தெளிவுபடுத்தினார். அதன் பிறகு அவருடனேயே மம்மூட்டி தங்கி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |