எனது மரண வேளையில் கூட நினைவில் இருக்கும் சம்பவம்! : டலஸ் அழகப்பெரும வெளியிட்ட தகவல் (Video)

Sri Lanka Media Trincomalee Dullas Alahapperuma
By Independent Writer Jan 06, 2022 10:29 AM GMT
Report

மனப்பாங்கின் அடிப்படையில்,  கற்பனை அடிப்படையில் அன்றி தகவல்களின் அடிப்படையில் தரவுகளின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma ) கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (6) அரசாங்க வெளியீட்டு பணியகத்தினை திறந்து வைத்துவிட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்க வெளியீட்டுப் பணியகம் திறந்து வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (06) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் அரசாங்க வெளியீட்டு பணிகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இதன்போது மேலும் உரையாற்றுகையில்,


19 ஆவது நூற்றாண்டில் 20வது நூற்றாண்டில் எரிபொருள் பெருமதியாக இருந்தது. ஆனாலும் 21 வது நூற்றாண்டில் தரவுகள் தகவல்கள் மிகவும் பெறுமதியானது எனவும் ஊடகவியலாளர்கள் தகவல்களையும், தரவுகளையும் மிகவும் சிறப்பான முறையில் சேகரித்து தகவல்களை வெளியிட வேண்டும்.

உலகில் மிகப் பெரிய நிறுவனங்களை எடுத்துப்பாருங்கள். சரியான தரவுகளை கொண்டுள்ளதாக இருக்கும். அதேபோன்றுதான் ஊடகவியலாளர்கள் சரியான தகவல்களையும், தரவுகளையும் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும்.

நானும் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஏனென்றால் அந்த சம்பவம் எனது மரண வேளையில் கூட நினைவில் இருக்கும் என்பது கவலைக்குரிய ஒரு விடயம்.

இலங்கையின் முதலாவது எச்.ஐ.வி நோயாளி ஒருவர் இனம் காணப்பட்ட காலப்பகுதியில் நான் எழுதிய செய்தியில் அவ்வாறு இனங்காணப்பட்ட எச்.ஐ.வி நோயாளியின் பெயரினை சுட்டிக்காட்டி இருந்தேன்.

எழுதப்பட்ட நாளிதழ் ஒன்றினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் குடும்பம் பல விளைவுகள் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் என்மீது நிறுவனத்தின் மூலம் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டது எனவே செய்தி ஒன்றை பிரசுரிக்கும் முன்னர் அந்த செய்தி தனிப்பட்ட நபரை குறிக்கின்றதா எதிர்காலப் பிரச்சனைகள் ஏதும் ஏற்படுமா என தீர விசாரித்து அதன் பின்னர் அந்த செய்தியினை பிரசுரிப்பது என்பதே முக்கிய விடயமாகும் எனவும் ஊடக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத், தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன பாண்டிக்கோரல, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரிவதி கலப்பதி ,சர்வமத தலைவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.             

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US