சுகாதார தொழிற்சங்கங்களின் குறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது! - ஹேமந்த ஹேரத்
இலங்கையில் சுகாதார தொழிற்சங்கங்களின் குறைகள் தொடர்பில் அரசாங்கமும், சுகாதார அமைச்சும் உரிய கவனம் செலுத்தியுள்ளதாகச் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சுமார் 1,000 அரச மருத்துவமனைகளில் சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பால் பணிநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக உரையாற்றிய அவர்,
நாட்டில் நிலவும் கோவிட் சூழ்நிலையில், பணிப்புறக்கணிப்பு எதிர்த் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே, இந்த தொழிற்சங்க நடவடிக்கை மோசமாக மாறவும், தற்போது வேகத்தைச் சீர்குலைக்கவும் யாரும் அனுமதிக்கக்கூடாது.
அதேநேரம், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளைக் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்க முடியும், அது விரைவில் நடக்கும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan