டுபாயில் கனமழை : பொதுசேவைகள் முடக்கம்
கடந்த 75 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பலத்த மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில இடங்களில் 250 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கும் டுபாயில் பலத்த மழை காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் சிலர் தங்கள் வாகனங்களை விட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ராஸ் அல்-கைமா பகுதியில் (Al-Khaimah) 70 வயது முதியவர் ஒருவர் தனது வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஓமானில், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததுடன் அதில் பாடசாலை மாணவர்களும் அடங்குவர் என ஓமான் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |