தொடரும் ட்ரோன் அச்சுறுத்தல்கள்! துபாய் விமான நிலைய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்
ஐக்கிய அரபு இராச்சியத்தை நோக்கி ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (Dubai International Airport) செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வான் பாதுகாப்பு நடவடிக்கை ஈரானிலிருந்து வந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தடுத்து அழிக்கும் பணியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வான் பாதுகாப்புப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எமிரேட்ஸ் ஏர்லைன்
நாட்டின் பல பகுதிகளில் கேட்ட பலத்த சத்தம், இந்த முறியடிப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டதே என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தற்காப்பு நடவடிக்கையின் போது விழுந்த சிதறல்களால் (Debris) ஒரு சிறிய சம்பவம் நிகழ்ந்ததாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பரவுவது போல விமான நிலையத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பிளைட் ரேடார் 24' (Flightradar24) தகவலின்படி, துபாய் நோக்கி வந்த பல விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடிக்க அறிவுறுத்தப்பட்டன.
நிலைமை சீராகும் வரை துபாய்க்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக எமிரேட்ஸ் ஏர்லைன் அறிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் தனது 100 சதவீத சேவைகளையும் வழங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தத் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
துபாய் ஊடக அலுவலகம்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் பதிலடி கொடுத்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி துபாய் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளைத் தடுத்து அழித்து வருவதாகவும், நாட்டின் பல பகுதிகளில் கேட்ட பலத்த சத்தங்கள் இதனாலேயே ஏற்பட்டவை என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ஏவுகணைகளைத் தடுத்த போது விழுந்த சிதறல்களால் ஒரு சிறிய சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவித்த துபாய் ஊடக அலுவலகம், விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை மறுத்துள்ளது.
இந்த இடையூறு காரணமாக, துபாய்க்கு வர வேண்டிய பல விமானங்கள் வானிலேயே காத்திருக்க வைக்கப்பட்டன இதற்கிடையில், எமிரேட்ஸ் ஏர்லைன் தனது அனைத்து சேவைகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்