வேட்பு மனுக்கள் நிராகரிப்பிற்கு விரைவில் தீர்வு: சித்தார்த்தன்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (DTNA) வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தால் தமக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புவதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினை இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிரான கொழும்பு உச்சநீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நேற்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தீர்வு
இதன்போது, குறித்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணையகம் மற்றும் வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு முடிவை கொண்டு வரும்படியும் எதிர்வரும் முதலாம் திகதி (1) அது சம்மந்தமான முடிவைத் தருவதாகவும் நீதியரசர் கட்டளை பிறப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
