யுக்திய சுற்றிவளைப்பு : 85 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
நாட்டில் யுக்திய சுற்றிவளைப்பில் 85 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 14 நாட்களை கடந்துள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கமைய கடந்த 17 ஆம் திகதி யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பமானது.
20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது
இதில் பாதாளக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து 55 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சொத்துகளும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .
கடந்த 14 நாட்களில் 20 ஆயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 1018 பேர் தடுப்புக் காவலிலும் 189 பேர் சொத்து சம்பந்தமான விசாரணகளிற்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
புனர்வாழ்வு
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையான 1298 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நாட்களுக்குள்11 கிலோ 600 கிராம் ஹெரோயினும், 8 கிலோ 378 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 297 கிலோ கஞ்சாவும். 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |