கட்டுத்துவக்கு வெடித்ததில் வயோதிபரொருவர் படுகாயம்
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுவர்ன ஜெயந்திபுர பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் வயோதிபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (01.01.2024) இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர் சேனைக்கு காவலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த கட்டு துவக்கு வெடித்துள்ளதாக தெரியவருகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலையில் அவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மஹதிவுல்வெவ-சுவர்ன ஜெயந்திபுர பகுதியைச் சேர்ந்த டீ.எம்.சோமசிறி (57 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டு மிருகங்களின் தொல்லை காரணமாக தேவையற்ற விதத்தில் வெடிப்பொருட்களை தயாரித்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில செயல்பட வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 2 மணி நேரம் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
