சுகாதாரத்துறையில் வருடாந்தம் சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு
சுகாதாரத்துறையில் வருடாந்தம் சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இதில் மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
சுகாதாரத்துறையில் மருத்துவ அலட்சியம் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சர் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.
சுகாதாரத்துறையின் அர்ப்பணிப்பு

புது வருடத்தில் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி : அடுத்தடுத்து அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்கள்
இது நோயாளிகளின் நலனில், சுகாதாரத்துறையின் அர்ப்பணிப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நோயாளிகளின் முறைப்பாடுகளின் முழுமையான பகுப்பாய்வில் பல தவறுகள் கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கான சேவையை முன்னுரிமைப்படுத்துமாறும், நோயாளிகளின் நல்வாழ்வை உறுதிசெய்வதில், அர்ப்பணிப்பை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் பத்திரன சுகாதார பணியாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 2 மணி நேரம் முன்

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam
