ஹெரோயின் பிடியில் 20 கிராமங்கள்! குற்றச் செயல்கள் அதிகரிப்பு - வெளியான திடுக்கிடும் தகவல்கள்

By Rakesh Sep 18, 2022 09:49 AM GMT
Report

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்து வருவதாக குறித்த மாவட்டத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெரோயினுக்கு அடிமையாகும் மாணவர்கள்

ஹெரோயினுக்கு அடிமையானவர்களில் அதிகமானோர் 18 – 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், யாழ். நகரிலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்களும் இதற்கு அடிமையாகியுள்ளனர் என்ற உண்மையும் தெரியவந்துள்ளது.

கொவிட், பொருளாதார நெருக்கடி என பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் யாழ். குடாநாட்டில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் பயன்பாடு பெருகியுள்ளது.

கொழும்பிலிருந்து விநியோகம்

கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகின்றது. இங்குள்ள பல நூற்றுக்கணக்கான முகவர்கள் ஊடாக அவை குடாநாட்டின் சகல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. உயிர்கொல்லி ஹெரோயினை ஊசி மூலமே அதிகளவானோர் பயன்படுத்துகின்றனர்.

ஹெரோயின் பிடியில் 20 கிராமங்கள்! குற்றச் செயல்கள் அதிகரிப்பு - வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Drugs Usage Increased

ஒரு நாளைக்கு 30 மில்லி கிராம் தொடக்கம் 300 மில்லி கிராம் வரையில் நுகர்கின்றனர். ஹெரோயின் நுகரும் பெரும்பாலான இளைஞர்களின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தாமே தமது பிள்ளைகளை பொலிஸில் ஒப்படைக்கின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

சில பெற்றோர் மருத்துவமனைகளிலும் தமது பிள்ளைகளை ஒப்படைத்துள்ளனர்.

யாழ். சிறைச்சாலையில் ஹெரோயின் பாவனையாளர்கள்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஹெரோயின் பாவனைக்கு அடிமையான சுமார் 320 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்கொல்லி ஹெரோயினுக்கு அடிமையாகி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று ஹெரோயின் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சைப் பிரிவு இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

ஹெரோயின் பிடியில் 20 கிராமங்கள்! குற்றச் செயல்கள் அதிகரிப்பு - வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Drugs Usage Increased

உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் பயன்படுத்திய 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

ஹெரோயினுக்கு அடிமையாகியுள்ள கிராமங்கள்

யாழ். மாவட்டத்தில் சுமார் 20 கிராமங்கள் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்களின் கூடாரமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்லும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US