வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருள் கண்டுபிடிப்பு - சிறைக்காவலர் அதிரடியாக கைது
வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றத்திற்காக சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(14.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறை ஆணையரும் ஊடகப் பேச்சாளருமான எஸ்.கே. பல்லெதென்ன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்
இதன்போது, குறித்த சிறைக்காவலரின் காலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 98 கிராம் ஐஸ் மற்றும் 16 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, சிறை அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டபோது, சிறையின் பிரதான நுழைவாயிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேகத்திற்குரிய சிறைக் காவலர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan