யுக்திய நடவடிக்கை : முப்பதாயிரத்தை அண்மித்த கைதுகள்
பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் மூலம் இதுவரையில் 28520 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இருபது நாட்களில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கைது செய்ய்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு 2303 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருமளவிளான போதைப்பொருள் மீட்பு
கைது செய்யப்பட்டவர்களில் 1434 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் ஏனையவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சோதனை நடவடிக்கைகளின் மூலம் 70 கிலோ கிராம் ஹெரோயின், 200 கிலோ ஐஸ் போதைப் பொருள், 340 கிலோ கிராம் கஞ்சா, 79147 போதை மாத்திரைகள் என்பன உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த யுக்திய நடவடிக்கைகளின் போது மனித உரிமைகள் மீறப்படுவதாக பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 4 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri