போதைப்பொருள் கடத்தல்! பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஒன்பது பேர் கைது
காலி, ஹக்மன, தெனகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கடத்தலின் போது 6 கிராம் மற்றும் 470 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
முன்னதாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளின் போது அவர் வெளியிட்ட தகவலின் பேரில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீடு சோதனையிடப்பட்டது.
இதன்போது 15 ஹெரோயின் பொதிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 38 வயதுடைய தெனகம, ஹக்மன, கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
