காசா மோதல் நிலைமைகளையும் இலங்கையையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது நியாயமற்றது! ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபைக்குள், காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெலிமடை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நேற்று(03.11.2023) திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை கூட்டம்
இது தொடர்பில் மேலும் கூறுகையில், மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கை மற்றும் காசா பகுதி தொடர்பில் இந்த நாடுகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறையில் எதற்காக வேறுபாடு காட்டப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
எவ்வாறாயினும் இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அடுத்த செப்டெம்பர் மாத, ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடருக்கு தூய்மையான கரங்களுடன் வந்தால் மட்டுமே பதிலளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் இலங்கை அதற்கு பதிலளிக்க வேண்டுமா? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனத்தை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி உலக நாடுகள் அனைத்தும் அதற்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri