கடற்றொழிலாளர் என்ற போர்வையில் போதைப்பொருள் வர்த்தகம்: தம்பிராசா குற்றச்சாட்டு
கடற்றொழிலாளர் என்ற போர்வையில் தமிழர் தேச வருங்கால சந்ததியை நாசமாக்கும் போதைப்பொருள் வியாபாரிகளை உள்வாங்கும் நோக்கத்தோடு கடற்றொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் இயங்க கூடாது என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்
ஊடக அமையத்தில் நேற்று(02.03.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சு பதவியில் இருப்பவர் அமைச்சு பதவியை பயன்படுத்தி காத்திரமான சட்டங்களை கொண்டுவந்து எமது கடற்றொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
அதை விடுத்து நான் அமைச்சு பதவியை துறந்து கடலில் போய் போராடுவேன் என்றால் அது வெட்க கேடான செயல். அமைச்சர் என்பது அதிகாரமுள்ள ஒரு பதவி. ஜனாதிபதியுடன் பேசி அமைச்சர், சக அமைச்சர்களுடன் பேசி வட, கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சாதகமான சட்டத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.
காத்திரமாக அதிகாரங்களை வைத்து சட்டங்களை உருவாக்கி இந்திய அரசுக்கு எங்களது கடற்றொழிலாளர் உரிமையில் தலையிட கூடாது என வலியுறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்ககையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
