மட்டக்களப்பில் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் ஜஸ் போதைபொருளுடன் கைது செய்யபட்ட பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உட்பட 4 பேரில் 2 பேரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பிரதான சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்று (28.11.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி! சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆதங்கம் (Photos)
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்து கடந்த (26.11.2023) ஆம் திகதி அதிகாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து பிரதான வியாபாரியான பாயிஸ் 72 கிராமுடனும் அவரது உதவியாளர் 13 கிராமுடனும் 25 கிராமுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர்10 கிராமுடன் மேலும் 4 பேரை 120 கிராம்; ஜஸ் போதை பொருளுடன் பொலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியோது பொலிஸார் பிரதான வியாபாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி கேரியதையடுத்து இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதிவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய இருவரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
