கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்
மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் 10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் இலங்கை மதிப்பு 250 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH 179 என்ற விமானத்தில் இரவு 11.30 மணியளவில் வருகைத்தந்த பயணி ஒருவரின் பயணப் பொதியில் இருந்தே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகள்
தேநீர் பொதியை போல இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைக்காக சந்தெகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
