போதைப்பொருள் சுற்றிவளைப்பு! பலர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று(18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது நாடளாவிய ரீதியில் 867 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, 20 கிலோ 616 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 44 கிலோ 508 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 6 கிலோ 914 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 28 ஆயிரத்து 225 கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது
அத்தோடு, 77 கிராம் குஷ் போதைப்பொருளும், 28 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 472 மாத்திரைகளும், 209 மதனமோதக மாத்திரைகளும், 4 கிலோ 484 கிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam