பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து யாழில் அதிகவிலையில் விற்கப்படும் போதை மாத்திரைகள்(Video)
500 போதை மாத்திரைகளுடன் வல்லை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி உப்பு வல்லை சந்திப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி அரச புலனாய்வாளர்களின் தகவலிற்கு அமைய நெல்லியடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
28 வயதுடைய சுன்னாகம் பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஒரு மாத்திரை 250 ரூபாய் வீதம் விற்பனை செய்வதாக அரச புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி கைது செய்யபட்டுள்ளார்.
இது போன்ற பல கைது நடவடிக்கைகளின் தொகுப்பாக வருகின்றது இந்த காணொளி,





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
