போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்-அமைச்சர் டிரான் அலஸ்
நாடு முழுவதும் பெருகி வரும் போதைப் பொருள் பரவலை எந்த முறையிலாவது கட்டுப்படுத்த போவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருளை கட்டுப்படுத்த தேவையான எந்த தீர்மானத்தையும் எடுக்குமாறு ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிகால தலைமுறையினரை அழிப்பதை போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நிறுத்த வேண்டும்
எதிர்கால தலைமுறையை அழிவுக்கு உட்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் கோருகிறேன். அவர்கள் இதனை நிறுத்தவில்லை என்றால், எந்த வழியிலாவது அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்.
போதைப் பொருள் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக துரித நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக இந்த ஆண்டு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விற்பனையாளர்கள், பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்துவோர் மற்றும் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.
போதைப் பொருள் பரவல் காரணமாக நாட்டில் பல இடங்களில் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவற்றை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இப்படியான குற்றச் செயல்களில் ஈடுபடும் அனைவரும் அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்கள் எங்காவது மறைந்திருந்த அவற்றை செய்து வந்தால், அனைத்தையும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸாருக்கு 118 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு தகவல்களை வழங்க முடியும் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு பொதுமக்களின் உதவி மிகவும் முக்கியமானது எனவும் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
