அம்பாறையில் கைதான போதைப்பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்
அம்பாறை- திருக்கோவில் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நேற்று(2.7.2026) உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்றுமுன்தினம்(1.7.2026) திருக்கோவில், காயத்திரி கிராமத்தில் உள்ள சந்தேகநபரின் வீடு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டது.
விளக்கமறியல்
இதன்போது, அங்கு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 40 வயதுடைய நபர், 7 கிராம் 199 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போதே, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam