தமிழர் பகுதியில் 18 வயது போதைப்பொருள் வர்த்தகர் கைது! (Video)
ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த பிரதான முகவரான சந்தேகநபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய வீதிக்கு அருகில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மீட்பு
இவ்வாறு கைதான நபர் பிரைந்துறைச்சேனை பகுதியை சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 6 கிராம் 500 மில்லிகிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் வாழைச்சேனை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri