தமிழர் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகர் கைது..!
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமான முறையில் இளைஞர்களுக்கு விநியோகித்து வந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகர் கைது
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி, நிறுத்தல் தராசு மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri