வெளிநாடுகளில் பதுங்கியுள்ள போதைப்பொருள் குற்றவாளிகள்..! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாயில் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து எதுவித தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம், பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக், துபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வியொன்றை முன்வைத்தபோது அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,
கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்
அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள்
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கிடைத்துள்ளன. பாதுகாப்புப் படைகள் நிலைமையை இன்னும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக பொலிஸார், குற்றப்புலனாய்வுத்துறை (CID) இது தொடர்பான முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளை சட்டப்பூர்வ வழிகளில் கைது செய்வதற்காக சிவப்பு (RED NOTICE) மற்றும் நீல நிற (BLUE NOTICE) அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இன்டர்போல் நடவடிக்கைகள்
சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவி வந்தபோதிலும், ஷிரான் பாசிக்கின் கைது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) இருந்து எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வரவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

அதிகாரிகள் தற்போது இன்டர்போல் (INTERPOL) மூலம் தங்கள் விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது.
அதன்படி, சந்தேகநபர்களை நீதியின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.