கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு (Photos)
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தொடரும் வரட்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீரின்றி அலையும் நிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலப்பெருமாள் குளம், ஆரோக்கியபுரம், அமைதிபுரம், கோட்டைகட்டி, துணுக்காய், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் நிலவும் வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதேபோல கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளிலும் வரட்சி காரணமாக அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குடிநீர் விநியோகம்
பூநகரி பிரதேசத்தின் பல இடங்களில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அப்பகுதிகளில் தொடர்ந்தும் வரட்சி நிலவுவதால் குடிநீர் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இப் பகுதியிலுள்ள நீர்நிலைகள் வற்றி காணப்படுவதனால், கால்நடைகளுக்கான குடிநீர் இல்லாத நிலை காணப்படுவதுடன் கால்நடைகளும் குடிநீர் தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் ஜேம்ஸ்புரம், அன்புபுரம் அக்கராயன், கோனாவில் போன்ற பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
