குவைத்தில் பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஆளில்லா விமானத்தில் ட்ரோன் தாக்குதல்
குவைத் அரசாங்கத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான மினா அல்-அஹ்மதி, இன்று (03) ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் குவைத் பெட்ரோலிய நிறுவனத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
பல பிரிவுகளில் தீ விபத்து
குவைத் பெட்ரோலிய நிறுவனம் தனது 'X' கணக்கு மூலம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது,

இந்த தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள பல செயல்பாட்டுப் பிரிவுகளில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, தீயை அணைக்கவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் அவசரகால மீட்புக் குழுக்கள் தற்போது தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த கூடுதல் விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையம், குவைத்தின் மிகப்பெரிய மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் எரிசக்தி ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.