போர் நிறுத்தத்தை மீறி காஷ்மீரில் ட்ரோன் தாக்குதல்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்திய நிர்வாக காஷ்மீர் பகுதியில் ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நகரம் முழுவதும் பலத்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"போர் நிறுத்தத்திற்கு என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டன," என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
What the hell just happened to the ceasefire? Explosions heard across Srinagar!!!
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
This is no ceasefire. The air defence units in the middle of Srinagar just opened up. pic.twitter.com/HjRh2V3iNW
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
குண்டுவெடிப்பு
ஸ்ரீநகர் பகுதியில் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும் குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.