வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் சாரதிகளை ஆட்சேர்ப்பு மூலம் உள்ளீர்ப்பதற்கு அனுமதி
வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் சாரதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்கான அத்தியாவசிய உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் 74 சாரதி பதவிகளை ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
வடக்கு மாகாண சபையின் வரலாற்றில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரே கட்டமாக இவ்வளவு பெருந்தொகையான சாரதிகளை ஆட்சேர்ப்பு மூலம் உள்ளீர்ப்பதற்கான அனுமதி கிடைத்திருப்பது முதன்முறையாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் சாரதி ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான நீண்டகால தேவைக்கு தீர்வு காணும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சாரதி பதவி
கிடைத்துள்ள அனுமதிக்கமைய 27 உள்ளூராட்சி நிறுவனங்களில் மொத்தம் 204 சாரதி பதவிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி காணப்படுகின்ற நிலையில், அதில் 85 வெற்றிடங்கள் காணப்பட்டுள்ளன.அவற்றில் 74 வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதி தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுநர், 'வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒரே தடவையில் இவ்வளவு பெருந்தொகையான சாரதி பதவிகளை ஆட்சேர்ப்பு மூலம் நிரப்புவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்.
மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த ஆளணி பற்றாக்குறைக்கு நடைமுறை ரீதியான தீர்வொன்றை நோக்கி நகர முடியும்' எனத் தெரிவித்தார்.