பிரேக் செயலிழந்ததாக கத்திய ஓட்டுநர்... விபத்தில் தப்பியவரின் பரபரப்பு வாக்குமூலம்!
எல்ல வெல்லவாய பள்ளத்தாக்கில் இருந்து பேருந்து விழுவதற்கு முன்பு அதன் பிரேக் செயலிழந்ததாக ஓட்டுநர் கத்தியதாகவும் அப்போது பயணிகள் அனைவரும் சிரித்ததாகவும் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பேருந்து விழுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், பிரேக் செயலிழந்து விட்டதாக ஓட்டுநர் கூறினார். அப்போது நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் சிரித்தனர்.
பிரேக் செயலிழப்பு
சில பயணிகள், ஓட்டுனரை பார்த்து பொய் கூற வேண்டாம் எனவும் கூறினர். அதனையடுத்து, உண்மையில் பிரேக் செயலிழந்ததை பயணிகள் உணர்ந்துகொண்டனர்.
எதிரே வந்த வாகனத்துடன் மோதியே பேருந்து கீழே விழுந்தது. அதன்பின்னர், நான் இறந்து விடுவேன் என நினைத்தேன். வைத்தியசாலையில் கண் விழிக்கும் போதே உயிருடன் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் எனக்கு சுயநினைவு இருக்கவில்லை. அதன் பின்னர், ஒரு குழந்தை கத்தும் சத்தத்தை கேட்ட பின்னரே சுயநினைவு வந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று(04.09.2025) நள்ளிரவு ஏற்பட்ட குறித்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும் 18 பேர் காயமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



